அரிய வகை வவ்வாலான நாய் முகம் கொண்ட வவ்வாலின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
சில நாட்களாக சமூகவலைதளத்தில் நாய் முகத்துடன் இருக்கும் வவ்வால் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தை கைலோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பல வித்தியாசமான வவ்வால் படங்களை இதுவரை பதிவிட்டு இருக்கிறோம். அவ்வகையில் பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தை சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
Since we're posting weird ass bats, this is Buettikofer's epauletted fruit bat, a megabat that frankly has no business flying around with a dog's face pic.twitter.com/FlWl3ffZOg
— cardinal copium (@emotionalpedant) June 29, 2020
இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரது பதிவை லைக் செய்து 5400க்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வகை வவ்வால்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக லிபெரிய, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா போன்ற இடங்களில் இந்த வகை வவ்வால்கள் பரவலாக காணப்படுகின்றன.