நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம்.
ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்தி கட்டுக்குள் வைக்கும். அதே நேரத்தில் எளிதில் உடல் எடையை இழக்க செய்வர்கள் ப்ராக்கோலியை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்து பொருள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும். இது நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும்.
ப்ரோக்கோலியில் தேவையான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் வலு வாக்குகிறது. சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முக சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் போன்றவற்றை தடுக்க இது உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் ஆகியவை புற்று நோயை விரட்டும் தன்மை வாய்ந்தது.