Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

நார்வே, ஸ்வீடன் போல சொர்க்க பூமியாக மாற…. பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும்….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நார்வே, ஸ்வீடன் போன்று தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர். மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன. அதுபோல தமிழகம் மாற பழனிச்சாமி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |