Categories
தேசிய செய்திகள்

நாற்காலியை தொட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்?…. ஆசிரியரின் கொடூர செயல்….. பரபரப்பு…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 வயது மகன் சுரேஷ் சிங் ஸ்ரீவாஸ் என்ற மாணவன் தான் அந்த கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |