Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நாலுபனை கிராமத்தினர் மனு”…. ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி….!!!!!!

நாலுபனை கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தங்கச்சிமடம் அருகே இருக்கும் நாலுபனை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்கள். அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகனங்கள் உள்ளே வந்து செல்ல முடியாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.

மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். மேலும் பாதையில் இருபுறமும் மரங்கள் வளர்ந்து உள்ளதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை இருக்கின்றது. இது பற்றி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்கள். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Categories

Tech |