செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வமே சசிகலாவை ஏற்றுக்கொண்டார், ஆனால் முதல்வராக்கிய எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார் என்ற கேள்விக்கு,
பதிலளித்த அவர், அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கனும். நான் என்ன பதில் சொல்வது ? யாரும் மறுக்க முடியாது… அவர்கள் வந்து தவழ்ந்து… நாலு கால் பிராணி மாதிரி வந்ததை யாருமே மறக்க முடியாது ? அவர் அப்படி பேசுகிறார் என்றால் யாரிடம் தவறு இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும், இது உலகத்துக்கே தெரிந்த விஷயம். இதில் நான் போய் அண்ணன் பழனிச்சாமி பற்றி சொல்லனுமா ? ஏற்கனேவே நொந்து போய் இருக்காரு, அவரை போய் நான் போய் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.
ஒருத்தர் பவர்ஃபுல்லா இருக்கும்போது நம்ம பேசலாம், அவர் பலவீனமாக இருக்கிறார் பாவம். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கலாம், எம்எல்ஏக்கள் இருக்கலாம், அது வேற ஒரு ஆளுமை என்பது வேற, அவரு ஆளுமையை இருக்காரா ? இல்லையா ? என்பது அவருக்கும் தெரியும் எல்லாருக்கும் தெரியும். அவர் அப்படி இருந்திருந்தால் அப்படி பேசியிருக்க முடியாது.
ஒருவரை பற்றி அப்படி ஒருத்தங்க பேசுகிறார்கள் என்றால் அவர் தடுமாறி தான் பேசுகிறார்கள், பயத்தில்தான் வார்த்தை விடுகிறார்கள். அதே மாதிரி எல்லாருக்குமே தெரியும் அவர்கள் பையனுக்கு தெரியும், மனைவிக்கு தெரியும் அவர் பதவி வாங்கினது எப்ப ? அன்றைக்கு யாரால முதலமைச்சர் ஆனார் என்று உலகத்திற்கே தெரிந்த விஷயம். அவர்சில வார்த்தைகளை சொல்கிறார். நான் பலமுறை கூறியிருக்கிறேன்…. நாலு கால் பிராணி மாதிரி தவழ்ந்து வந்தது யாரென்று கேட்டிருக்கிறேன் ? இதுமாதிரி பேசுவார் என்று தெரிந்து தான் நான் சொன்னேன்,