உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.38 கோடியை கடந்துள்ளது.
உலக மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.38 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 9.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 27.27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 2.13 கோடிக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் 90,150 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாஅதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.