Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்தியா.. பிரிட்டன் உதவி..!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருவதால், இங்கிலாந்து அரசு மருத்துவ உதவி அளிக்க முன்வந்துள்ளது.   

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இதனால் இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்காக செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் செலுத்த பயன்படும் கருவிகள் போன்ற சுமார் 600 கருவிகளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் எங்களிடம் இருப்பதால் இந்தியாவிற்கு உதவ முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருவிகள் அடுத்த வாரத்தில் டெல்லிக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன்  பற்றாக்குறை மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஒரே நாளில் சுமார் 3,49,691 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த நான்கு தினங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக உச்சத்தை அடைந்துள்ளது. இணையதளங்களில் மக்கள் உதவிக்காக கதறி வருவதும், அரசாங்கத்தின் வேலையை பொதுமக்களாகவே நிறைவேற்றி வருவதும் மருத்துவமனைகளில் இருக்கும் அதிகமான நோயாளிகளால் மருத்துவ பணியாளர்கள் திணறி வரும் சூழலும் உருவாகியுள்ளது.

இதற்கிடையில் சுமார் 9 விமானங்களில் இருந்து மருத்துவ கருவிகளை இங்கிலாந்து அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்லும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்தியாவின் இந்த நிலைக்கு அமெரிக்காவும் உதவுவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பின்றி செயல்படுவது தான் காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |