திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் போலீஸ் ஏட்டு மற்றும் 78 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,263 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 228 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1,612 மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.