Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளாது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,588 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,411 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 153 பேர் தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |