சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 112 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 764 பேர் தற்போது தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 86 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.