பிரான்சில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து பிரான்சில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் Olivier veran தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏற்கனவே 16 மாவட்டங்களுக்கு நான்கு வார காலம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது Never, Aube, Rhone என்ற மூன்று மாவட்டங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த 19 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஆறு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய அனுமதி சீட்டு கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையங்களில் நடைபெறும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்