கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நோயை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வந்தனர்.
காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் பேருந்துகளை நிறுத்தி பயணிகள், கண்டக்டர், டிரைவர் என முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்களிடம் தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். அதேபோல வருவாய்த்துறையினர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிரடியாக பேருந்துகளை ஆய்வு செய்து பயணிகளுக்கு அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். மேலும் சரியான முறையில் முக கவசங்களை முகங்களில் அணியாதவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.