கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் 6.5 கோடியாகும். இதில் டீசல் செலவு 3.5 கோடி இதனை எண்ணெய் நிறுவனங்கள் போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நான்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய சூழலில் கேரளா அரசு போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தியுள்ளது. அதனால் போக்குவரத்து கழகம் தற்போது தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிலுவையில் உள்ள 123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான 139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக கேரளா அரசு போக்குவரத்து கழகம் தனது சேவைகளை குறைத்து இருக்கின்றது.
மேலும் டீசல் தட்டுப்பாடு கேரளா அரசு போக்குவரத்து கழகத்தின் காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 % பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கு இடையே கனமழை காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக அந்த மாநில போக்குவரத்து கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.