Categories
மாநில செய்திகள்

நாளை(ஏப்ரல் 11) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை கருதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 23 ஆம் தேதி வேலை நாள் ஆகும் என தெரிவித்துள்ளார். எனவே நாளை அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |