தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி மே 15ஆம் தேதி அதாவது நாளை உடுமலை உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலப்பம்பட்டி, பூலாங்கிணர், கிளுவன் காட்டூர் மற்றும் அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம் என 4 மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்:
தொட்டியனுார் பீடர், பெரியகோட்டை பிரிவு, சுந்தர் நகர், அண்ணா குடியிருப்பு, மலைப்ப கவுண்டர் லே-அவுட், காந்திநகர், நேரு வீதி, ராஜேந்திரா ரோடு, நேரு நகர், கல்யாணி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும்.
பூலாங்கிணர் துணை மின் நிலையம்:
தளி பீடர், வாளவாடி, தென்பூதிநத்தம், அம்மாபட்டி, அமணசமுத்திரம், தளி, திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, சின்ன குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்:
கொமரலிங்கம் மற்றும் மில் பீடர், கொமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், கொழுமம், வீரசோழபுரம், குப்பம்பாளையம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்:
துறையூர், மஞ்சநாயக்கனுார், அரசூர், கம்பாலபட்டி மற்றும் குள்ளேகவுண்டனுார் ஆகிய அங்கலக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும்.