நடிகை பிரியா பவானி சங்கர் தனது பதிவை விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் . இதைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஓமண பெண்ணே, பொம்மை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது நடிகை பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
You guys 😂 my intention was not to snap at him,But some people think it’s very cool to find a negative perspective in anything and everything. 99% of the times i try to ignore. But yes the world has a lot of negative energy already. Let’s not add more to it. Cheeers 🙌🏼 pic.twitter.com/FKWhd7fePd
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 19, 2021
இந்நிலையில் நடிகை பிரியா எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பதிவில் கி. ராஜநாராயணன் எழுதிய புத்தகங்களுடன் தொடர்புடைய தன் குழந்தை பருவ அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் ‘உயிரோடு இருக்கும்போது விட்ருங்க செத்தவுடனே டயலாக் விட்ராங்க பாரு முடியல டா’ என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரியா ‘நாளைலேர்ந்து உயிரோடு இருக்கிறவங்களுக்கு அஞ்சலி செலுத்திடறோம்ங்க ஐயா’ என பதிலடி கொடுத்துள்ளார்.