Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து கட்சி குழு… டெல்லி பயணம்…. வெளியான தகவல்…!!!

மேகதாது அணை தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணையை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசிடம் வழங்கவும் உள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநில முதல்-மந்திரிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |