Categories
மாநில செய்திகள்

“நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்”….. பேச்சுவார்த்தையில் தீர்வு….!!!!

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என பள்ளி கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 91 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89 சதவீதமும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95 சதவீதமும், சிபிஎஸ்சி பள்ளிகள் 86 சதவீதம் இயங்கியுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

Categories

Tech |