Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

காமராஜர் பிறந்தநாளானது 2006-ம் வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். மேலும் காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும். காமராஜர் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கவில்லை என்பதால் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுமா? இல்லையா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை பள்ளிகள், கல்வி அலுவலங்களில் கல்வி வளர்ச்சி நாளை அனுசரிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |