Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி…. CM கொடுக்க போகும் துறை என்ன தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்க விரும்புவதாக கூறுகின்றனர். அதேசமயம் உள்ளாட்சித் துறை கூட கொடுக்க வாய்ப்புள்ளதாம். இதனால் இதில் ஏதேனும் ஒரு துறை மட்டும் உறுதி என்பது தெளிவாகியுள்ளது.

Categories

Tech |