Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி,அதாவது நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |