இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் மொகரம் பண்டிகையொட்டி நாளை அரசு பொது விடுமுறைக்காக அறிவிப்பு வெளியாக உள்ளது.