இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன் உரையாடலை பெகாஸஸ் மூலம் வேவு பார்த்ததை கண்டித்து நாளை மறுநாள் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.