புயல் காரணமாக நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுகை, நாகை, தஞ்சை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்ளில் மட்டும் நிவர் புயல் கரையை கடக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.