Categories
மாநில செய்திகள்

நாளை இந்த பகுதிகளில்…. மின்சார ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 மணி, 1.40 மணி, 2.30 மணி, கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து புறப்படும்.

தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.20 மணி, 11.30 மணி, மதியம் 12.10 மணி, 12.30 மணி, 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15 மணி, 11 மணி, மதியம் 12.25 மணி, மற்றும் காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 8.45 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் எழும்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

Categories

Tech |