கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கேரள மக்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையானது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் மேற்படி தினத்தன்று வழக்கம்போல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.