Categories
மாநில செய்திகள்

நாளை காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக…. மதுசூதனன் உடல் வைப்பு…. வெளியான தகவல்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை காலை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல், அதன் பின்பு மூல கொத்தளம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |