தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் கொரோனா தடுப்பூசி மையங்களின் விவரம் நாளை காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.. மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பபூசிக்கான டோக்கன் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.