தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் காரணமாக கொரோனா பரவலாம் என்பதால் கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.