Categories
மாநில செய்திகள்

நாளை கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை இல்லை… வெளியான அறிவிப்பு…!!

மே 5ம் தேதியான நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்பேடு மார்க்கெட் இயங்குவதில்லை. இதன் காரணமாக நாளை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருடம்தோறும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அனைத்து மார்க்கெட்டுகளிலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை தான் கொரோனா காரணமாக நாளை அரசு நெறிமுறை வழிகாட்டுதலுடன் மார்க்கெட் இயங்கும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |