Categories
மாநில செய்திகள்

நாளை சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயிலும், காரைக்குடி மற்றும் திருவாரூர் செல்ல இருந்த சிறப்பு ரயிலும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் எண் 06197 திருவாரூர் மற்றும் காரைக்குடி டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 24ஆம் தேதி அதாவது நாளை காலை 8.10 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனைப் போலவே காரைக்குடி மற்றும் திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் 06198 நாளை மாலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட இருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |