நாளை கனகம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கின்றது.
ஆகையால் நாளை சூலேறிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மறைமலைநகர் கோட்ட பொறியாளர் மனோகரன் கூறியுள்ளார்.