தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பி.காம் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு புதிய மண்டல மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், அண்ணாமலை பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
Categories