ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.