Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை (ஜூலை 5) முதல் ஜூலை 8 வரை மின்சார ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

சென்னையில் தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11:25 மணி, 11.45 மணிக்கு புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றது.

அதனைப் போலவே மறுமார்க்கமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |