கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்பு