சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நாளை அரசு பணிக்கான ஆணையை தமிழக முதலமைச்சர் வழங்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.