சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி இன்று மதியம் 3 மணி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.