சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு குறைந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரலில் நடைபெற்ற இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.