Categories
தேசிய செய்திகள்

நாளை தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில்…. தமிழ்நாடு சார்பாக 17 பேர் பங்கேற்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி, நாளை  மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள்.
இதில் ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை அனுப்பிய மாநிலங்கள் பட்டியலில் அரியானா முதலிடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதிகபட்சமாக அரியானாவில் இருந்து 31 பேர், பஞ்சாப் 19 பேர், தமிழ்நாடு 17, கேரளா 8, உத்திரபிரதேசம் 8, மகாராஷ்டிரா 6, மணிப்பூர் 5 பேர் என வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் தடம் பதிக்க சென்றுள்ளனர்.

Categories

Tech |