Categories
மாநில செய்திகள்

நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை…. 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் காரணமாக நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாளும் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்றும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |