மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கடற்கரை மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த புயலானது மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் கொண்டு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கமும், புயலின் வேகமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தினம் தமிழகத்தில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியின் காரணமாக நாளைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து புயலின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தினால் நாளை தினம் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் தங்களுடைய நாளைய செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறு தேதி என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப்பின் திங்கட்கிழமை ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி அந்தந்த தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்வுக்கு தயாராக இருக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது நாளைய தினம் மட்டும் அண்ணா, சென்னை பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் கல்லூரிகள் உடைய செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது..