நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகாமை வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒன்று முப்பது மணிக்குள் மாணவர்கள் வந்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் N95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.