தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதையடுத்து 44 மாநகராட்சி பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டு மழையால் பாதிக்கபட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் இந்த பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும்.