தெலுங்கானாவில் 8ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஐகோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறி இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
Categories