Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு….. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்….!!!!

தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது விடுமுறை முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்று பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் ஜூன் 13-ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

மேலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறந்ததும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்பு நடத்தப்படும் . தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளி செயல்படும் நேரத்தை பள்ளி மேலாண்மை குழுகளுடன் ஆலோசித்து அந்தந்த பள்ளிகள் முடிவு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டுமெனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |