தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக நாளை அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.