Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. பள்ளிக்கு மீண்டும் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்கு சாவடி எண் 17 W-ல் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் நாளை வாக்காளர்களுடைய இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை (பிப்.21) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |