பிரதமர் நரேந்திர மோடி வருகை முன்னிட்டு நாளை நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை பென்சஸ் சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தேவை ஏற்பட்டால் டீலர் சாலை சந்திப்பில் ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது.
மேலும் வணிக நோக்கத்திலான வாகனங்கள் ஈவேரா பெரியார் சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல முடியாது. பிராட்வேயில் இருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம் தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூல கவுத்தலம் நோக்கி திருப்பி விடப்படுகிறது. மேலும் வியாசர்பாடி, மேம்பாலம் வழியாக சென்று தங்களது வழித்தடங்களை வாகன ஓட்டிகள் அடையலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பொதுமக்கள் தங்களது பயணத்திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.